காட்சி 1:
கடந்த ஞாயிறன்று இந்தியா-தென்னாப்ரிக்கா 3ஆவது ஒரு நாள் போட்டி. இந்தியா விளையாடிக் கொண்டிருந்த போது, தென்னாப்ரிக்க வீரர் Jacques Kallis வீசிய பந்தை இந்திய வீரர் M.S. Dhoni லகுவாக சிக்ஸர் அடித்துவிட, ஒரு அனிச்சை செயல் போல் Jacques Kallis Dhoniஐ நோக்கி உதிர்த்த வார்த்தைகள் என்னை உறையச் செய்தன...."You f...king Indian bastard." நிறவெறித்தனத்தின் கேவலமான வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று.
காட்சி 2:
இப்போது ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் Ashes தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Monty Panesar என்ற வீரரை நோக்கி, சில ஆஸ்திரேலிய கருங்காலிகள் "stupid Indian" என்று சொல்லியதைக்கூட ஒரு கணக்கில் சேர்க்கலாம். ஆனால் இதற்கு சப்பைக்கட்டும் விதமாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் Board தலைவர் James Sutherland சொன்ன வார்த்தைகளான "I don't think there's too much racist about that." நிறவெறி கருங்காலித்தனத்தின் உச்சகட்டம்.
இன்றைய காலகட்டத்தில், Competitive sportsல் வெறியோடு மோதிக் கொள்வது ஒரு சாதாரணமான காரியமாக போய்விட்ட போதும்கூட, இம்மாதிரியான நிகழ்வுகள் மனதில் விவரிக்க முடியாத வலியை ஏற்படுத்தி விடுகின்றன.
விளையாட்டு, இலக்கியம், இசை, கலை முதலியன ஜாதி, மதம், மொழி, நாடு, நிறம் என்ற எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டவை என்பதே பொதுவான ஒரு பார்வையென்ற போதிலும், இன்று இம்மாதிரியான ஊடகங்களிலும், தேவையற்ற பல விஷ விதைகள் விதைக்கப்பட்டுவிட்டன என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை.
கிரிக்கெட்டில் slow over rate, excessive appealing, improper dress code போன்ற காரணங்களுக்காக வீரர்களின் match fee பறிக்கப்படுவதையும், பின்னர் வரும் சில ஆட்டங்களில் அவர்கள் விளையாட முடியாதபடி தடை செய்யப்படுவதையும் (suspension) பார்க்கும் போது, எனக்குள் எழும் சில கேள்விகள். இதே வகையான அல்லது இதை விட கடுமையான தண்டனைகள், தனிநபர் மற்றும் நிறவெறித்தாக்குதல் நடத்தும் வீரர்களுக்கு தரப்படுவதில்லை? இது இன்னும் apartheid இருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது?
கேள்விகள்.....கேள்விகள்.....யாரிடம் உண்டு பதில்கள்?
Saturday, December 2, 2006
நிறவெறித்தனம்- இன்னும் ஏன்? ஏன்? ஏன்?
Posted by அகத்தீ at 7:12 AM
Labels: சமூகம்/அரசியல்
Subscribe to:
Post Comments
(Atom)
5 comments:
அவர்கள்.... இல்ல .....அதுங்க மாடு மேய்க்கும் போதே நாம நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தோம்...விடுங்க சார்..
அவர்கள்.... இல்ல அதுங்க மாடு மேய்க்கும் போதே நாம நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தோம்...விடுங்க சார்..
அன்புள்ள pothihaisaaral...நீங்கள் சொல்வது சரிதான்...ஆனாலும் மனசு கேக்கமாட்டேங்குது...What did we do to deseverve this?
இதே தென்னாபிரிக்கா அண்மையில் அவுஸ்திரேலியாவில் கடுமையான முறையில் நிறவெறித் தூற்றலை எதிர்கொண்டது.
அதற்கெதிராகக் கடுமையாகப் போராடி அதைப் பெரிய பிரச்சினையாக்கினார்கள்.
இப்போது அவர்களே இன்னொரு நாட்டைத் திட்டுகிறார்கள்.
கிரிக்கெட் விளையாட்டைப் பொருத்தவரை ஆஸியில் நிறவெறி சற்று அதிகம்தான்.
எந்தஅணி வந்தாலும் ஏதாவது சிக்கலில் மாட்டுப்பட்டுவிடுகிறார்கள்.
அனானியாரே...வருகைக்கு நன்றி..நீங்கள் சொல்வது சரி...இவங்கள என்ன செய்யலாம் சொல்லுங்க?
Post a Comment