Monday, December 4, 2006

இனி புதிதாய் உழு

வாகனங்கள் பறக்கும் சாலை;
புகை விட்டுக்கொண்டேயிருக்கும் ஆலை
இருக்குமா இவ்வுலகம் நாளைக் காலை?

விளைச்சல் இல்லாமல் வாடும் காடுகள்
உழுதது போய் இன்று அடிமாடுகள்.
என்று முடியும் இந்த பாடுகள்?

நிலத்தடியில் இல்லாத நீர்
எங்கள் விவசாயிகளின்
கண்களில்.

போதும் பூச்சிக்கொல்லி, இரசாயண உரம்
இனி கேட்டுப் பெறுவோம் ஒரு புது வரம்.
என்னினமே, தெரியுமா உனக்கு?
ஒரு புதுக் கணக்கு?
சாலச்சிறந்த உரம் தருவது மண்புழு.
இனி இரசாயணங்கள் ஏறட்டும் கழு.
என் விவசாயியே, பொங்கி எழு;
இனி புதிதாய் உழு.

No comments: