மக்களே...சிறிது நாட்களாய் பயந்துக் கொண்டிருந்த காரியம் நடந்த போது மனதுக்கு கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருந்தது. ஏற்கனவே இருந்த சர்க்கரை கூடிப்போனதால் ஏற்ப்பட்ட சில உபாதைகளை என் உடம்பு தாங்க முடியவில்லை என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை...காரணம், எனக்கு 34 வயதுதான் ஆகிறது.
பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கோவையில் இருக்கும் Coimbatore Diabetic Foundation என்ற ஸ்தாபனத்துக்கு போன போது அங்கு பார்த்த சில விடயங்களும் என்னுடைய பொதுவான் கருத்துக்களும் உங்கள் பார்வைக்கு.
Diabetes mellitus எனப்படுவது ஒரு நோயல்ல..அது உடலில் வரும் ஒரு குளறுபடி. இதற்கு மருந்தை விட கட்டுப்பாடு மிக முக்கியம். உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே வாழ்நாளுக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த போதுமானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாஸிம் அக்ரம் இதற்கு நல்ல உதாரணம்; a good example for success inspite of a disorder that can hamper one's progress. ஆகவே மருந்து கால், மதி முக்கால் என்பதை நாம் உணர வேண்டும். இல்லையெனில் மாத்திரைகள்...இன்சுலின் ஊசிதான்.
அடுத்தாக நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று..சர்க்கரை யாருக்கு வேண்டுமானால் வரும்...அதற்கு வயது வரம்பு கிடையாது...குறிப்பாக, BPO மற்றும் மென்பொருள் துறையில் உள்ள இளைஞர்களை இது இன்று தாக்குகிறது. காரணம் அவர்களுடைய தாறுமாறான lifestyle...அதாவது குடி, புகை, துரித உணவு, மன அழுத்தம் and what not? 10, 12 வயது குழந்தைகளே சுமார் 10% உலகளவில் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டிருக்கும் போது..நாம் வருமுன் காப்பது நல்லது.
கவணிக்கபட வேண்டிய இன்னொன்ரறு...சர்க்கரை ஒரு பரம்பரை பிரச்சினைகூட. குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய யாருக்காவது இது இருந்தால் இருபதுகளில் நாம் நம் உடல் மீது கவணம் கொள்ள வேண்டும். Otherwise, genes will play their ugly role.
அடுத்து நாம் கவணத்தில் கொள்ள வேண்டியது, அதீத சர்க்கரையால் பாதிக்கப்படும் நபர்களின் குடும்பத்தினரும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கல் என்ற ஒரு விடயத்தை. என்னால் என் மனைவி மிகவும் பீதியடைந்திருப்பது நான் கண்கூட கண்ட ஒன்று. ஒரு விரிவுரையாளராக வேலை பார்க்கும், மன உறுதி உள்ள என் மனைவியே இதை ஜீரணிக்க கஷ்டப்பட்டார் என்ற போது மற்றவர்களுடைய மனநிலை எவ்வாறாக பாதிக்கப்ப்டும்?
என்னுடைய வாழ்வின் முன் பகுதியில் நான் மேற்ச்சொன்னவற்றில் கவணக்குறைவாக இருந்ததால் இப்போது தினமும் இருமுறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அன்பான இளவயது மனைவி போக, 4 வயது, 8 மாதமென்று 2 மணியான பெண் குழந்தைகள் எனக்கு. என்னுடைய கவலைகள் எல்லாம் இவர்களைச் சுற்றித்தான். ஆனால் நான் இப்போது விழித்து விட்டேன். "வருமுன் காப்போம்" என்பது எவ்வளவு சத்தியமோ அதை போன்றது தான் "Its better to be late than never." ஆகவே சர்க்கரைக்கு எதிரான ஓட்டத்தை நான் சற்று தாமதமானாலும் தைரியமாக தொடங்கிவிட்டேன். அப்ப நீங்க?!
Thursday, December 14, 2006
இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்
Posted by அகத்தீ at 12:36 AM
Subscribe to:
Post Comments
(Atom)
4 comments:
:( சீக்கிரமே குணமாக வாழ்த்துக்கள்..
பூரண குணம் சாத்தியம் தானே?அல்லது வாழ்க்கை முழுவதும் கட்டுப்பாடுகள் தாமா?
பொன்ஸ், மிக்க நன்றி. கட்டுப்பாடுகளை இனி வாழ்க்கை முழுதும் கடைபிடிக்க வேண்டுமாம். ஆனால் அவையொன்றும் அவ்வளவு கடினமாயில்லை.
அகத்தீ,
சரியான நேரத்தில் விடப்பட்ட எச்சரிக்கை. பெற்றோருக்குச் சர்க்கரை இருந்தால் எந்த வயதாக இருந்தாலும் அனைத்து நல்ல பழக்கங்களையும் கடைப் பிடித்தாலும் வருசத்துக்கு ஒருமுறை செக்கப் செய்து கொள்வதும் அதீத கவனத்துடன் இருப்பதும் அவசியம்.
எங்க அப்பாவுக்கும் இருந்தது :(
உங்களிடம் இன்னொரு கோரிக்கை. அவ்வப்போது மருத்துவர்களின் அறிவுரைகளையும் என்னென்ன உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் பதிவுகளாக எழுத வேண்டும். அத்தோடு மன தைரியத்தைத் தூண்டும் பதிவுகளையும் தாருங்கள்.
அன்புடன்,
பிரதீப்
பிரதீப்,
வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
நீங்கள் சொல்வது மிக்கச் சரி. நாம் அதீத கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம்.
நீங்கள் சொன்னது போல பதிவுகளை இடுவேன்.
Post a Comment