Saturday, December 2, 2006

ஒப்பற்ற ஒப்பனை-அதான் மேக்கப்புங்கோ

இன்றைய காலகட்டத்தில் makeup என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது... tweezingங்க்றாய்ங்க, facialங்க்றாய்ங்க, bleachingங்க்றாய்ங்க, ஒன்னும் புரியலடா சாமி...நம்ம நன்பர் ஒருத்தர்...சில பெண்களோட மே.மு-மே.பி படங்கள (அதாங்க மேக்கப்புக்கு முன் & மேக்கப்புக்கு பின்) மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்...சும்மா சொல்லக்கூடாது...மேக்கப்போட மகிமையே மகிமை..அவருக்கு பெண்களோட படங்கதான் கெடச்சிருக்கு...ஆணோட படத்துக்கு என்னோடத டெவலப் பண்ண குடுத்திருக்கேன்...அதுவரைக்கும் என்சாய் திஸ்...

5 comments:

துளசி கோபால் said...

இந்த மேக்கப் தொழில் எப்படி வளர்ந்துருக்குன்னு பாருங்க!
அம்மாடியோ!!!!!!

எந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போனாலும் ஒரு தளம் முழுசும் மேக்கப்பே மேக்கப்.


சம்பாதிக்கிறதிலே முக்காவாசியை இப்படி இதுலே கொட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்கு
இங்கத்து இளைய சமுதாயம்.

ஆம்பிளைகளுக்கும் மேற்படி சமாச்சாரம் எல்லாம் வந்து இங்கே சக்கைப்போடு போடுது.


பி.கு: உங்க படம் வந்ததும் மறக்காமப் போட்டுவிடுங்க,ஆமாம்.

அகத்தீ said...

துளசி அக்கா..நீங்க சொன்னது ரொம்பச் சரி...சிலர் சம்பாதிக்கிறதே இதுக்குத்தான்.

//பி.கு: உங்க படம் வந்ததும் மறக்காமப் போட்டுவிடுங்க,ஆமாம்.//

போடறேன்...அதுவரக்கும் தாங்காதுன்னா Local Zoo போய் திருவாளர் குரங்கை பாருங்க...ஏறக்குறய ஒரே ஜாடைதான்.

கோழை said...

அகத்தீ இப்படங்களை ஏற்கனவே என்னுடைய பதிவொன்றில் இட்டு விட்டேன்.... check on http://eathokirukkalkal.blogspot.com/2006/09/blog-post_14.html

அகத்தீ said...

ஆதவன்! இது என் பார்வை...அது உங்கள் பார்வை...சரிதானே?

சேதுக்கரசி said...

நம்ம இந்தியப் பெண்களுக்குத் தான் இந்தக் கலை இன்னும் அத்துப்படியாகலை! (அத்துப்படியாகாமலே இத்தனை பசங்க பின்னாடி வர்றாங்கன்னா, அத்துப்படியானா? :-))

சரி சீக்கிரம் தமிழ்மணத்தில் மறுமொழி நிலவரம் வர ஏற்பாடு பண்ணுங்க! இங்கே பாருங்க:
http://thamizmanam.com/tmwiki/index.php?id=help