Wednesday, December 6, 2006

தூய மனதுக்கார துளசி அக்கா, பொன்மனம் கொண்ட பொன்ஸ்

Titleல் உள்ள இந்த இரண்டு நல்ல உள்ளங்கள் இல்லையென்றால் எனக்கெல்லாம் தமிழ்மணமாவது, இ-கலப்பையாவது?!

ப்ளாக் என்ற ஒரு ஊடகத்தை கேள்விப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளேயே இப்படி பதிவுகள் போடுவேன் என்றோ, தமிழ்மணத்தில் உள்ள குறிச்சொற்கள் பகுதியில் என் பெயர் வருமென்றோ நான் கனவிலும் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

ஆங்கிலத்தில் உள்ள புலமையாலும், ஒரு Peter effectக்காகவும் Fire Within என்ற பெயரில் ஆங்கிலப் பதிவுகள் ஒன்றிரண்டு இட்டிருந்த என்னை அகத்தீ என்று பெயர் மாற்றி தமிழில் பதிவிட ஒரு உத்வேகத்தை கொடுத்தது துளசி அக்காவின் தாயுள்ளம் என்றால், பதிவுகளை 3,4 நாட்கள் தொடர்ச்சியாக கண்கானித்து, அவற்றை தமிழ்மணம் திரட்ட 100% ஏற்பாடு செய்தது பொன்ஸின் பொன்மனம்.

உங்கள் இருவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். God bless you dear sisters.

6 comments:

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள்!

//ஆங்கிலத்தில் உள்ள புலமையாலும், ஒரு Peter effectக்காகவும்//

:-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான நன்றிப் பதிவு!
பதிவை எழுதுவார்கள்!
நீங்கள் வரைந்தே விட்டீர்கள்!!

துளசி கோபால் said...

என்னாப்பா அகத்தீ..... இப்படி 'மனசை டச்' பண்ணிட்டியேப்பா:-)))

அடாடா.... 'என்ன தவம் செய்தனை.........
எங்கும் நிறை வலைஞர்கள் 'அக்கா' என்றழைக்க' ன்னு பாடவச்சாச்சா? :-)

நல்லா இருங்க.

'தீ'யை மூடி போட்டு மறைக்க முடியுமா?

பொன்ஸ்~~Poorna said...

ஆகா.. இதெல்லாம் என்னங்க.. ரொம்பவே டச் பண்ணிட்டீங்க.. அக்கா சொல்வது மாதிரி...

படம் ரொம்ப நல்லா இருக்கு..

அப்புறம் ஒரு டிப்ஸ்: பதிவின் தலைப்பு ரொம்ப நீளமா இருந்தால் சில சமயம் பின்னூட்டங்கள் சரியா வராது.. கொஞ்சம் சின்னதாவே போடுங்க :)

பொன்ஸ்~~Poorna said...

ஆகா.. இதெல்லாம் என்னங்க.. ரொம்பவே டச் பண்ணிட்டீங்க.. அக்கா சொல்வது மாதிரி...

படம் ரொம்ப நல்லா இருக்கு..

அப்புறம் ஒரு டிப்ஸ்: பதிவின் தலைப்பு ரொம்ப நீளமா இருந்தால் சில சமயம் பின்னூட்டங்கள் சரியா வராது.. கொஞ்சம் சின்னதாவே போடுங்க :)

அகத்தீ said...

சேதுக்கரசி, வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

kannabiran, RAVI SHANKAR (KRS), நன்றிகள் தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும்.

பதிவின் இரு கதாநாயகிகளும் வந்து படித்து, கருத்துக்களை பதிவு செய்ததற்கு மிக்க நன்றிகள்.

//'தீ'யை மூடி போட்டு மறைக்க முடியுமா? //

அக்கா, போட்டிருந்த மூடியை எடுத்துவிட்டு, நீங்களும் விசிறி, பொன்ஸையும் விசிற வச்சு....many thanks to both of you

பொன்ஸ்..டிப்ஸுக்கு நன்றிகள்.