எரிவாயு உங்களுக்கு,
சக்கைச் சானி எங்களுக்கு!
விமானம் உங்களுக்கு,
அது விடும் புகை எங்களுக்கு!
பொன்னி உங்களுக்கு,
புழுத்துப் போனது எங்களுக்கு!
வருமானம் உங்களுக்கு,
வரி எங்களுக்கு!
நிவாரணம் உங்களுக்கு,
ரணம் எங்களுக்கு!
லஞ்சம் உங்களுக்கு,
பஞ்சம் எங்களுக்கு!
பன்னீர் உங்களுக்கு,
கண்ணீர் எங்களுக்கு!
அரசியல்(தீவிர)வாதிகளே!
பதவி மட்டும் வேண்டும் உங்களுக்கு??!!
உதவி எப்ப வரும் எங்களுக்கு??!!
Thursday, December 7, 2006
அரசியல்(தீவிர)வாதிகள், அப்பாவி பொதுஜனம்
Posted by அகத்தீ at 12:47 PM
Subscribe to:
Post Comments
(Atom)
4 comments:
//வருமானம் உங்களுக்கு,
வரி எங்களுக்கு\\
இது உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை.
இவன் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...உண்மைதான்...ஆனால் கசப்பான் உண்மை...சரிதானே?
excellent!!
idharkku mael solla iyalaadhu. romba azaga solli irukeenga. paaraatukkal
கிட்டு...மிக்க நன்றி.
Post a Comment