மக்களே..சர்க்கரை நோய் பற்றி நான் இட்டுக்கொண்டிருக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.
முந்தைய பதிவுகள் இங்கே..
இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம் http://paradise-within.blogspot.com/2006/12/blog-post_14.html
இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்-பகுதி 2 http://paradise-within.blogspot.com/2006/12/2.html
சர்க்கரை வந்தாகிவிட்டது...தினமும் இருமுறை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் ஒரு நிலை. இதுதான் முடிவா? இல்லை என்று அடித்துச் சொல்வேன். சரியான கோணத்தில் பயணித்தால் ஒரு புதிய உலகத்துக்குள் நான்/நீங்கள் நுழையலாம். அதற்கு ஆதாரமாக மருத்துவமனையில் எனக்கு தரப்பட்ட Diet Planஐ இங்கு தர விரும்புகிறேன்.
காலை 6-6:30
காபி அல்லது தேனீர் அல்லது பால் 150 மில்லி- சர்க்கரை பதிலாக crystal fructose பயன் படுத்த வேண்டும். Crystal fructose????? இங்கே பாருங்கள். www.diabeticsugar.com
காலை 8-8:30
1. 3 இட்லி அல்லது 3 தோசை அல்லது 2 சப்பாதி அல்லது 3 சிறிய அடை
2. கூட சாம்பார் 1/2 கப், சட்னி 1/2 கப் (தேங்காய் மற்றும் நிலக்கடலை சட்னிக்கு பெரிய தடா), மற்றும் காய்கள், கீரைக்கூட்டு எவ்வளவு வேண்டுமானாலும்.
காலை 10-11
1. ஏதாவது பயறு அவித்தது ஒரு கப்
2. காய்கறி சாலட்
3. அரை ஆப்பிள் அல்லது ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி அல்லது ஒரு கீற்று பப்பாளி அல்லது தர்பூசனி அல்லது ஒரு கொய்யா.
4. மோர்..எவ்வளவு வேண்டுமானாலும் அல்லது காய்கறி சூப் ஒரு கப்.
மதியம் 1-1:30
1. சாதம் 225 கிராம் (ஒரு சிறிய டேபிள் டாப் தராசு இருத்தல் நலம்)
2. காய்கள், கீரைக்கூட்டு எவ்வளவு வேண்டுமானாலும்.
3. சுண்டல் ஒரு கப்
4. சாம்பார் 1/2 கப்
5. ரசம் 1/2 கப்
6. மோர் ஒரு கப்.
மாலை 4-5
1. கோதுமை ரொட்டித் துண்டுகள் 2 அல்லது 3 மாரி பிஸ்கட்டுகள்.
2. காபி அல்லது தேனீர் அல்லது பால் 150 மில்லி- சர்க்கரை பதிலாக crystal fructose.
3. காய்கறி சாலட்
இரவு 8-8:30
காலை உணவு போல
மக்களே...இது ராஜ உணவு போல இல்லை? ஒரு சாதாரண ஆளைவிட சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிடும் உணவும், முறையும் ஒரு 'blessing in disguise' effectஐ கொடுக்கிறது தானே? பிறகென்ன? சர்க்கரைக்கு எதிரான ஓட்டத்தை வேகமாக ஓடுவோம். Come lets fight a good fight.
Friday, December 15, 2006
இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்-பகுதி 3
Posted by அகத்தீ at 11:05 AM
Subscribe to:
Post Comments
(Atom)
6 comments:
ஒரு சின்ன அறிவுரை சொல்லலாமா? உங்கள் வயது சிறுவயதாக இருக்கிறது. சர்க்கரை நோய்க்கு வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு முன் சென்னைக்கு சென்று இன்னொரூ டாக்டரின் அபிப்ராயத்தை கேட்டு கொள்ளவும்
சர்க்கரை நோய் பற்றிய எளிய விளக்கமும், உணவு முறையும் நன்றாக வந்திருக்கிறது, அகத்தீ!
மாலை 4 - 5 என்பது காலை என்று இருக்கிறது.
சரி செய்யவும்.
முக்கியமாக சர்க்கரைநோயாளிகள் கவனிக்க வேண்டியது இதுதான்.
எல்லாரையும் போல ஒரு பொழுது உண்டுவிட்டு, காயப்போட முடியாது மற்ற நேரங்களில்.
அடுத்த 3 - 4 ம்ணி நேரத்துக்குத் தேவையான, அதுவும், நாம் செய்யப் போகும் வேலையின் அளவுக்குத் தேவையான உணவை மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஒரே வேளையில் உண்ணாமல், பகிர்ந்து உண்ண வேண்டும்.
அப்படி உண்டுவிட்டு, ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்கக் கூடாது.
அதை இந்த 3 மணி நேரங்களுக்குள் செலவழித்துவிட வேண்டும், செய்யும் வேலையின் மூலம்.
உணவு, உடற்பயிற்சி இவை இரண்டும் இதன் இரு கண்கள்.
நான் கூட என்ன்னிடம் வருபவர்களிடம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு!
"உங்களுக்கு வந்திருப்பது சர் + கரை வியாதி,
சர் என்றால் சரீரம், உடல்!
உடலைப் பேணுங்கள் உணவின் மூலம்.
கர் என்றால் வேலை.
சாப்பிட்டதும் சற்று உடலுக்கு வேலை கொடுங்கள்.
இப்படிச் செய்தால் இந்நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்" என்று!
சரி, அதிகம் பேசிவிட்டேன்!
:))
ரொம்ப தேவையான தகவல்கள். ஏற்கனவே இதைப் பத்தி ரெண்டு மூணு பதிவர்கள் எழுதியிருக்காங்க. அவங்க கிட்ட அனுமதி கேட்டு எல்லாத்தையும் ஒரே எடத்தில போட்டு வைக்கலாமே.
இந்த சாதரண சர்க்கரைக்கு மாத்தா, இனிப்பு துளசின்னு ஒரு பொருளைப் பத்தி வீட்ல சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கும் அது என்னன்ற விவரம் தெரியலை. அப்போ நெட்ல தேடிக்கிட்டு இருக்கறப்ப முத்தமிழ் மன்றத்து லிங்க் ஒன்னு கிடைச்சது. அதை கீழ ஒட்டிருக்கேன்.
ரத்தினகிரி - டிச 09, 2005 - 12:53 PM
Post subject: சர்க்கரைக்கு மாற்று இனிப்புத் துளசி:
மாறி வரும் உணவுப் பழக்கத்தால் இனிப்பின் தேவை அதிகரித்து வருகிறது. எடை கூடி உடல் பெருத்தலும் நீரழிவு நோயும் பெருகி வருகின்ற கால கட்டம் இது. சர்க்கரை நுகர்வில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் தான் பெருமளவு சர்க்கரை நோயாளிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சர்க்கரையைத் தரும் தாவரம் தான் "ஸ்டீவியா ரிபாவ்டியானா" என்னும் "இனிப்புத் துளசி" ஆகும். பராகுவேயைத் தாயகமாகக் கொண்ட இனிப்புத்துளசியின் இலைகளை உலர்த்தி தூளாக்கி உணவுப் பொருட்களில் இனிப்பூட்டியாகப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதுமின்றி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பண்புகளைப் பெற்றிருப்பதால் பன்னாட்டுச் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.
http://www.stevia.net/
http://www.onemorebite-weightloss.com/sugarfree.html
அஸ்டிரேசியா (சூரியகாந்தி) குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் செடி பல்லாண்டு வாழும் குறுஞ்செடியாகும். இலைகள் மிதமான பச்சை நிறம் கொண்டதாகவும் இனிப்பூட்டியாகவும் இருக்கும். இலைகளில் காணப்படும் ஸ்டீவியோசைடு மற்றும் ரிபாடியோசைடு போன்ற வேதிப் பொருட்களால் சர்க்கரையக் காட்டிலும் 200 மடங்கு இனிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இதில் கால்சியம் சைக்ளமேட், சாக்கரின், அஸ்போர்டேம் மற்றும் கலோரிகள் இல்லாததால் ரத்தத்தின் சர்க்கரை அளவை உயர்த்தாது.
செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நரம்பியல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் இனிப்புத் துளசியால் ஏற்படுவதில்லை. ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் இதன் தேவை அதிகரித்து வருகிறது.
1. இதன் இலைகள் அதிக இனிப்பைத் தருபவை.
2. இதன் இலைகளை உலர்த்தி சேமிக்கலாம்.
3. இதை பச்சையாகவே பயன்படுத்தலாம்.
1 கிலோ சர்க்கரைக்கு பதிலாக 50 கிராம் ஸ்டீவியாவா இலையே போதுமானது. இது சமைக்கும் போது பழுப்பு நிறமடையாது. இதனால் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சேமிப்புக் காலம் கூடும். இதனால் பற்சிதைவைத் தடுக்க முடியும். நுண்ணியிர் எதிர்ப்புத் தன்மை கொண்டிருப்பதால் குழந்தை உணவுகளில் ஸ்டீவியா முதன்மை இடம் வகிக்கக் கூடும். சிறிய இலைத் துண்டு ஒரு மணி நேரத்துக்கு இனிப்பைத் தரும். எனவே அசை போடும் பதார்த்தங்கள், வாய் நாற்றம் நீக்கிகளில் இவைகளைப் பயன்படுத்தலாம். முகப்பரு, காயம், வெட்டு மற்றும் அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கவும் இருமலைக் குறைக்கவும் இனிப்புத் துளசி பயன்படுகிறது.
3 மாதங்களில் 45 செமீ. வரை வளரும். இவ்வாறு வணிகவாய்ப்பு, நிலத்தின் தன்மை, உழவு, மண் வகை, நடவு, பயிர்வகைகள், உரமிடல், பாசனம், பயிர் பாதுகாப்பு, பராமரிப்பு, அறுவடை என அந்தக் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
-----------------------
இக்கட்டுரையை முனைவர் அ. இரமேஷ் குமார் மற்றும் மு. பிரபு, பழப்பயிர் துறை, HCA RT, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை எழுதியுள்ளனர்.
கலைக்கதிர் மார்ச் 2005 வெளியீடு.
எடுத்த இடத்தோட லிங்க்
http://72.14.209.104/search?q=cache:jLoh5L9xic4J:www.muthamilmantram.com/index.php%3Fname%3DPNphpBB2%26file%3Dviewtopic%26t%3D2377%26view%3Dprevious+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF&hl=en&gl=ca&ct=clnk&cd=2
அருமையான பதிவு! அத்தோடு பயனுள்ள பின்னூட்டங்கள்.
முக்கியமான கேள்வி! சர்க்கரை நோயாளிகள் கணக்குப் பார்க்காமல் சாப்பிடக் கூடியவைகளில் பச்சைக் காய்கறிகள் தவிர்த்து வேறென்ன உண்டு? காய்கறிகளில் எவற்றைத் தவிர்க்க வேண்டும்?
பயறு வகைகளிலும் குறிப்பிட்ட அளவுதான் சாப்பிட வேண்டுமா? புரோட்டீன் நிறைந்த பதார்த்தங்கள் பற்றியும் சொல்லுங்கள்.
நன்றி.
excellent post with so many info..good work
என்னங்க அத்தோட நிறுத்திட்டீங்க... மேலும் சொல்லுங்கள்.
இந்த சுகர் ஃப்ரீயை சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? அல்லது யாரும் பயன் படுத்தலாமா?
இதைப் பயன்படுத்துவதால் வரும் நன்மை (எனக்குத் தெரிந்த இரண்டே இரண்டு குறைவான கலோரிகள் மற்றும் அதே சுவை) தீமைகள் என்ன?
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இவற்றை எழுதுங்கள்.
Post a Comment