Thursday, December 14, 2006

இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்-பகுதி 2

மக்களே...இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்-பகுதி 1க்கு கீழ்க்கண்ட உரலியை சுட்டுங்கள்.
http://paradise-within.blogspot.com/2006/12/blog-post_14.html

பகுதி ஒன்றில் பின்னூட்டம் இட்ட ப்ரதீப் அவர்கள் என்ன சொன்னார் என்பதை நான் அப்படியே copy & paste செய்கிறேன். He has a very valid point here. மரபின் காரணமாக வரக்கூடிய சர்க்கரையைப் பற்றி அவர் அழகாக் விளக்கியுள்ளதைப் பாருங்கள்.

"அகத்தீ,

சரியான நேரத்தில் விடப்பட்ட எச்சரிக்கை. பெற்றோருக்குச் சர்க்கரை இருந்தால் எந்த வயதாக இருந்தாலும் அனைத்து நல்ல பழக்கங்களையும் கடைப் பிடித்தாலும் வருசத்துக்கு ஒருமுறை செக்கப் செய்து கொள்வதும் அதீத கவனத்துடன் இருப்பதும் அவசியம்.

எங்க அப்பாவுக்கும் இருந்தது :(

உங்களிடம் இன்னொரு கோரிக்கை. அவ்வப்போது மருத்துவர்களின் அறிவுரைகளையும் என்னென்ன உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் பதிவுகளாக எழுத வேண்டும். அத்தோடு மன தைரியத்தைத் தூண்டும் பதிவுகளையும் தாருங்கள்.

அன்புடன்,
பிரதீப்"

நன்றி ப்ரதீப்.

ப்ரதீப்புடைய வேண்டுகோளுக்கேற்ப நான் சில காரியங்களை பதிவுகளாக எழுதப் போகிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

1 comment:

பிரதீப் said...

எம் வேண்டுகோளை ஏற்றமைக்கு மிக்க நன்றி அகத்தீ!

என் நண்பர்களில் சிலருக்குச் சர்க்கரை இருப்பதே தெரியவில்லை. சர்க்கரை அளவு அதிகரித்தால் ஏற்படும் எந்த அறிகுறியும் அவர்களுக்கு இல்லை. ஆனாலும் வேலைக்குச் சேர்வதற்கு முன்னதாகச் செய்யப்படும் சம்பிரதாயச் சோதனைகளில் இந்த அணுகுண்டு வெளிப்பட்டது.

தோண்டிப் பார்த்தால் அவர்களுக்கு மரபுப் பின்னணி இருப்பது தெரிய வந்தது.

நீங்கள் இடப்போகும் இப்பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பது நிச்சயம். வாழ்த்துகளும் நன்றிகளும்.

அன்புடன்,
பிரதீப்