Sunday, November 19, 2006

என்னை மிகவும் பாதித்த ஒரு கவிதை

கவிஞர் சுகிர்தராணியின் இந்த கவிதை என்க்குள் ஏற்ப்படுத்திய பாதிப்பை விளக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.

ஒருவேளை

தோலினால் அடி தைக்கப்பட்டக்
கூடையுடன் அவள் கிளம்புகிறாள்
முனைமழுங்கிய இரும்புத்தகடும்
சேகரிக்கப்பட்ட சாம்பலும்
அவள் கைகளில் கனக்கின்றன.
மனித நெரிசலில் திணறும்
வீடொன்றின் பின்புறம் வந்து நிற்கிறாள்
பார்வையில் படுகிறது.
ஆணியில் சுழலும் சதுரத்தகடு.
ஒற்றைக்கையால் அதை உயர்த்தியபடி
சாம்பலையள்ளி உள்ளே வீசுகிறாள்
பின்
துளையின் முரட்டுப் பக்கங்களில்
முழங்கை சிராய்க்க
இடவலமாய் கூட்டிக் கூட்டி
கூடையில் சரிக்கிறாள்.
நிரம்பிய கூடை தலையில் கனக்க
நெற்றியில் வழியும் மஞ்சள்நீரை
புறங்கையால் வழித்தபடி
வெகுஇயல்பாய் கடந்து போகிறாள்,
அவளுக்காக என்னால் முடிந்தது
ஒருவேளை மலங்கழிக்காமலிருப்பது.

1 comment:

துளசி கோபால் said...

**** தனி மடல் *****

உங்க இமெயில் ஐடி தாங்க. உங்க ப்ரொஃபைலில் காணொமே(-:

gopal.tulsi@gmail.com

தொடர்பு கொள்ளவும்.