Friday, December 15, 2006

இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்-பகுதி 3

மக்களே..சர்க்கரை நோய் பற்றி நான் இட்டுக்கொண்டிருக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.

முந்தைய பதிவுகள் இங்கே..

இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம் http://paradise-within.blogspot.com/2006/12/blog-post_14.html

இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்-பகுதி 2 http://paradise-within.blogspot.com/2006/12/2.html

சர்க்கரை வந்தாகிவிட்டது...தினமும் இருமுறை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் ஒரு நிலை. இதுதான் முடிவா? இல்லை என்று அடித்துச் சொல்வேன். சரியான கோணத்தில் பயணித்தால் ஒரு புதிய உலகத்துக்குள் நான்/நீங்கள் நுழையலாம். அதற்கு ஆதாரமாக மருத்துவமனையில் எனக்கு தரப்பட்ட Diet Planஐ இங்கு தர விரும்புகிறேன்.

காலை 6-6:30

காபி அல்லது தேனீர் அல்லது பால் 150 மில்லி- சர்க்கரை பதிலாக crystal fructose பயன் படுத்த வேண்டும். Crystal fructose????? இங்கே பாருங்கள். www.diabeticsugar.com

காலை 8-8:30

1. 3 இட்லி அல்லது 3 தோசை அல்லது 2 சப்பாதி அல்லது 3 சிறிய அடை
2. கூட சாம்பார் 1/2 கப், சட்னி 1/2 கப் (தேங்காய் மற்றும் நிலக்கடலை சட்னிக்கு பெரிய தடா), மற்றும் காய்கள், கீரைக்கூட்டு எவ்வளவு வேண்டுமானாலும்.

காலை 10-11

1. ஏதாவது பயறு அவித்தது ஒரு கப்
2. காய்கறி சாலட்
3. அரை ஆப்பிள் அல்லது ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி அல்லது ஒரு கீற்று பப்பாளி அல்லது தர்பூசனி அல்லது ஒரு கொய்யா.
4. மோர்..எவ்வளவு வேண்டுமானாலும் அல்லது காய்கறி சூப் ஒரு கப்.

மதியம் 1-1:30
1. சாதம் 225 கிராம் (ஒரு சிறிய டேபிள் டாப் தராசு இருத்தல் நலம்)
2. காய்கள், கீரைக்கூட்டு எவ்வளவு வேண்டுமானாலும்.
3. சுண்டல் ஒரு கப்
4. சாம்பார் 1/2 கப்
5. ரசம் 1/2 கப்
6. மோர் ஒரு கப்.

மாலை 4-5
1. கோதுமை ரொட்டித் துண்டுகள் 2 அல்லது 3 மாரி பிஸ்கட்டுகள்.
2. காபி அல்லது தேனீர் அல்லது பால் 150 மில்லி- சர்க்கரை பதிலாக crystal fructose.
3. காய்கறி சாலட்

இரவு 8-8:30
காலை உணவு போல

மக்களே...இது ராஜ உணவு போல இல்லை? ஒரு சாதாரண ஆளைவிட சர்க்கரை உள்ளவர்கள் சாப்பிடும் உணவும், முறையும் ஒரு 'blessing in disguise' effectஐ கொடுக்கிறது தானே? பிறகென்ன? சர்க்கரைக்கு எதிரான ஓட்டத்தை வேகமாக ஓடுவோம். Come lets fight a good fight.

Thursday, December 14, 2006

இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்-பகுதி 2

மக்களே...இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்-பகுதி 1க்கு கீழ்க்கண்ட உரலியை சுட்டுங்கள்.
http://paradise-within.blogspot.com/2006/12/blog-post_14.html

பகுதி ஒன்றில் பின்னூட்டம் இட்ட ப்ரதீப் அவர்கள் என்ன சொன்னார் என்பதை நான் அப்படியே copy & paste செய்கிறேன். He has a very valid point here. மரபின் காரணமாக வரக்கூடிய சர்க்கரையைப் பற்றி அவர் அழகாக் விளக்கியுள்ளதைப் பாருங்கள்.

"அகத்தீ,

சரியான நேரத்தில் விடப்பட்ட எச்சரிக்கை. பெற்றோருக்குச் சர்க்கரை இருந்தால் எந்த வயதாக இருந்தாலும் அனைத்து நல்ல பழக்கங்களையும் கடைப் பிடித்தாலும் வருசத்துக்கு ஒருமுறை செக்கப் செய்து கொள்வதும் அதீத கவனத்துடன் இருப்பதும் அவசியம்.

எங்க அப்பாவுக்கும் இருந்தது :(

உங்களிடம் இன்னொரு கோரிக்கை. அவ்வப்போது மருத்துவர்களின் அறிவுரைகளையும் என்னென்ன உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் பதிவுகளாக எழுத வேண்டும். அத்தோடு மன தைரியத்தைத் தூண்டும் பதிவுகளையும் தாருங்கள்.

அன்புடன்,
பிரதீப்"

நன்றி ப்ரதீப்.

ப்ரதீப்புடைய வேண்டுகோளுக்கேற்ப நான் சில காரியங்களை பதிவுகளாக எழுதப் போகிறேன்.

மீண்டும் சந்திப்போம்.

இன்சுலின் தொடங்கப்பட்ட நேரம்

மக்களே...சிறிது நாட்களாய் பயந்துக் கொண்டிருந்த காரியம் நடந்த போது மனதுக்கு கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருந்தது. ஏற்கனவே இருந்த சர்க்கரை கூடிப்போனதால் ஏற்ப்பட்ட சில உபாதைகளை என் உடம்பு தாங்க முடியவில்லை என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை...காரணம், எனக்கு 34 வயதுதான் ஆகிறது.

பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கோவையில் இருக்கும் Coimbatore Diabetic Foundation என்ற ஸ்தாபனத்துக்கு போன போது அங்கு பார்த்த சில விடயங்களும் என்னுடைய பொதுவான் கருத்துக்களும் உங்கள் பார்வைக்கு.

Diabetes mellitus எனப்படுவது ஒரு நோயல்ல..அது உடலில் வரும் ஒரு குளறுபடி. இதற்கு மருந்தை விட கட்டுப்பாடு மிக முக்கியம். உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே வாழ்நாளுக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த போதுமானது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாஸிம் அக்ரம் இதற்கு நல்ல உதாரணம்; a good example for success inspite of a disorder that can hamper one's progress. ஆகவே மருந்து கால், மதி முக்கால் என்பதை நாம் உணர வேண்டும். இல்லையெனில் மாத்திரைகள்...இன்சுலின் ஊசிதான்.

அடுத்தாக நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று..சர்க்கரை யாருக்கு வேண்டுமானால் வரும்...அதற்கு வயது வரம்பு கிடையாது...குறிப்பாக, BPO மற்றும் மென்பொருள் துறையில் உள்ள இளைஞர்களை இது இன்று தாக்குகிறது. காரணம் அவர்களுடைய தாறுமாறான lifestyle...அதாவது குடி, புகை, துரித உணவு, மன அழுத்தம் and what not? 10, 12 வயது குழந்தைகளே சுமார் 10% உலகளவில் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டிருக்கும் போது..நாம் வருமுன் காப்பது நல்லது.

கவணிக்கபட வேண்டிய இன்னொன்ரறு...சர்க்கரை ஒரு பரம்பரை பிரச்சினைகூட. குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் நெருங்கிய யாருக்காவது இது இருந்தால் இருபதுகளில் நாம் நம் உடல் மீது கவணம் கொள்ள வேண்டும். Otherwise, genes will play their ugly role.

அடுத்து நாம் கவணத்தில் கொள்ள வேண்டியது, அதீத சர்க்கரையால் பாதிக்கப்படும் நபர்களின் குடும்பத்தினரும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கல் என்ற ஒரு விடயத்தை. என்னால் என் மனைவி மிகவும் பீதியடைந்திருப்பது நான் கண்கூட கண்ட ஒன்று. ஒரு விரிவுரையாளராக வேலை பார்க்கும், மன உறுதி உள்ள என் மனைவியே இதை ஜீரணிக்க கஷ்டப்பட்டார் என்ற போது மற்றவர்களுடைய மனநிலை எவ்வாறாக பாதிக்கப்ப்டும்?

என்னுடைய வாழ்வின் முன் பகுதியில் நான் மேற்ச்சொன்னவற்றில் கவணக்குறைவாக இருந்ததால் இப்போது தினமும் இருமுறை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அன்பான இளவயது மனைவி போக, 4 வயது, 8 மாதமென்று 2 மணியான பெண் குழந்தைகள் எனக்கு. என்னுடைய கவலைகள் எல்லாம் இவர்களைச் சுற்றித்தான். ஆனால் நான் இப்போது விழித்து விட்டேன். "வருமுன் காப்போம்" என்பது எவ்வளவு சத்தியமோ அதை போன்றது தான் "Its better to be late than never." ஆகவே சர்க்கரைக்கு எதிரான ஓட்டத்தை நான் சற்று தாமதமானாலும் தைரியமாக தொடங்கிவிட்டேன். அப்ப நீங்க?!

Monday, December 11, 2006

வெள்ளிப்பெண்


வலிமையான பல போட்டியாளர்களைத் தள்ளி,
நீ வென்றிருக்கிறாய் பெருமைக்குரிய வெள்ளி.
நீ பிறந்தது ஒரு மூலையில் உள்ள புதுக்கோட்டை,
இன்று தொட்டிருப்பது பாராட்டுக்குரிய வெற்றிக்கோட்டை.

Keep up the good work Shanthi Soundarrajan.

Mediaக்கள் ஒரு அஞ்சு பாபி ஜார்ஜ்க்கும் ராஜ்யவர்த்தன் ரத்தோருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த தமிழ்ப் பெண்ணுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும். மிகவும் வறியதொரு குடும்பத்தில் பிறந்து, diet, training, sponsorship போன்ற வசதிகள் இல்லாமல் இந்த சாதனையை செய்திருக்கும் சாந்திக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் 15 லட்ச ரூபாய் பரிசு போதாது. She deserves a lot more.

Saturday, December 9, 2006

இது ஒரு Peter பதிவு

மக்களே! என் மனைவி விரிவுரையாளராக வேலை பார்க்கும் கல்லூரியில் இயற்கை வளங்களை வருங்கால சந்ததிகளுக்காக பாதுகாப்பது எப்படி என்ற கருவை மையமாக வைத்து ஒரு மாநாடு நடக்கிறது. அது தொடர்பாக வெளியிடப்படும் மலருக்காக ஒரு Peter கவிதை கேட்டார்கள்..நானும் நம்ம Peter புலமைய எடுத்து விட..வந்ததுதான் இந்தக் கவிதை...படிச்சிப் பாருங்க மக்களே.

Nurture the nature for future

O Mankind! Vow to nurture the Mother Nature,
That you may grow in prosperity and healthy stature.
If with desire, this vision and vigour, you capture,
For ages nature will bless you with unsullied rapture.
From the denizens under the sun in the future,
You can avoid getting an evil nomenclature,
Of plundering the nature as a reckless thief
With scarring the earth your motto chief.
Be one with nature and make the world better
That you may not yourself pain and fetter,
And end even without an ounce of water.
Get onto the pro-nature constructive carriage,
Never will you regret this wonderful marriage
Where you stand as an ennobled soul tall
Be it winter, rain, summer, or fall.

Thursday, December 7, 2006

அரசியல்(தீவிர)வாதிகள், அப்பாவி பொதுஜனம்

எரிவாயு உங்களுக்கு,
சக்கைச் சானி எங்களுக்கு!

விமானம் உங்களுக்கு,
அது விடும் புகை எங்களுக்கு!

பொன்னி உங்களுக்கு,
புழுத்துப் போனது எங்களுக்கு!

வருமானம் உங்களுக்கு,
வரி எங்களுக்கு!

நிவாரணம் உங்களுக்கு,
ரணம் எங்களுக்கு!

லஞ்சம் உங்களுக்கு,
பஞ்சம் எங்களுக்கு!

பன்னீர் உங்களுக்கு,
கண்ணீர் எங்களுக்கு!

அரசியல்(தீவிர)வாதிகளே!
பதவி மட்டும் வேண்டும் உங்களுக்கு??!!
உதவி எப்ப வரும் எங்களுக்கு??!!

Wednesday, December 6, 2006

தூய மனதுக்கார துளசி அக்கா, பொன்மனம் கொண்ட பொன்ஸ்

Titleல் உள்ள இந்த இரண்டு நல்ல உள்ளங்கள் இல்லையென்றால் எனக்கெல்லாம் தமிழ்மணமாவது, இ-கலப்பையாவது?!

ப்ளாக் என்ற ஒரு ஊடகத்தை கேள்விப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களுக்குள்ளேயே இப்படி பதிவுகள் போடுவேன் என்றோ, தமிழ்மணத்தில் உள்ள குறிச்சொற்கள் பகுதியில் என் பெயர் வருமென்றோ நான் கனவிலும் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

ஆங்கிலத்தில் உள்ள புலமையாலும், ஒரு Peter effectக்காகவும் Fire Within என்ற பெயரில் ஆங்கிலப் பதிவுகள் ஒன்றிரண்டு இட்டிருந்த என்னை அகத்தீ என்று பெயர் மாற்றி தமிழில் பதிவிட ஒரு உத்வேகத்தை கொடுத்தது துளசி அக்காவின் தாயுள்ளம் என்றால், பதிவுகளை 3,4 நாட்கள் தொடர்ச்சியாக கண்கானித்து, அவற்றை தமிழ்மணம் திரட்ட 100% ஏற்பாடு செய்தது பொன்ஸின் பொன்மனம்.

உங்கள் இருவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். God bless you dear sisters.

ஜாதிகள் இரண்டு லட்சமொழிய வேறில்லை

நான் ஒரு முதலியார்;
நான் நாயர், நான் நம்பியார்;
எல்லாவற்றுக்கும் முதல் யார்?

நான் வீரமுள்ள தேவர்.
மீசையை முறுக்கினால்
ஆயிரம் பேர் அடித்துச் சாவர்!

நான் ரெட்டியார்.
நான் செட்டியார்.
பணம் பண்ணுவதில் கெட்டி பார்!

நான் நெல்லைச்சீமை நாடார்.
வியாபாரக்கப்பலின் ராடார்.

நான் வடகலை, நான் தென்கலை
யாருக்கய்யா வேண்டும் ஒத்து வாழும் கலை?

நான் இந்து.
நான் கிறித்தவன்.
நான் முகம்மதியன்.

எல்லால் சரிதான்!!!
நீங்கள் மேன்மக்கள்தான்.
ஆனால் தெரியுமா உங்களுக்கு?!
நாங்கள் கடுமையாய் உழைப்பவர்.
நீங்கள் அதனால் பிழைப்பவர்.
நாங்கள் பாட்டாளிகள்;
என்றும் வறுமைக்கு கூட்டாளிகள்.

Tuesday, December 5, 2006

ஜஸ்ட் for fun

நான் சிரிச்சேன்...நீங்களும் சிரிங்க...பல பேரு பாத்து சலிச்சிருக்கலாம்...ஆனா இந்தக் கத்துக்குட்டி இத ரொம்ப ரசிச்ச்சுங்கோ.




Monday, December 4, 2006

பொங்கியெழுதலால் நிரம்பும் சிறைகள்!

சமத்துவம் கூறும் நல்ல பல மறைகள்;
நல்வாழ்வுக்கு அவை வேண்டிய முறைகள்.

காசுக்காய் பலர் எழுதுவர் அவற்றுக்கு உரைகள்,
ஆயினும் சமூகம் போடும் அவற்றுக்கு திரைகள்.

இந்த அவலம் கண்டாயிற்று பல பிறைகள்;
என்று சேருமோ கழண்ற சாதி மத மறைகள்?!

இல்லையெனில் ஒலிக்கப்படும் போர்ப்பறைகள்;
பொங்கியெழுதலால் நிரம்பும் சிறைகள்!

இனி புதிதாய் உழு

வாகனங்கள் பறக்கும் சாலை;
புகை விட்டுக்கொண்டேயிருக்கும் ஆலை
இருக்குமா இவ்வுலகம் நாளைக் காலை?

விளைச்சல் இல்லாமல் வாடும் காடுகள்
உழுதது போய் இன்று அடிமாடுகள்.
என்று முடியும் இந்த பாடுகள்?

நிலத்தடியில் இல்லாத நீர்
எங்கள் விவசாயிகளின்
கண்களில்.

போதும் பூச்சிக்கொல்லி, இரசாயண உரம்
இனி கேட்டுப் பெறுவோம் ஒரு புது வரம்.
என்னினமே, தெரியுமா உனக்கு?
ஒரு புதுக் கணக்கு?
சாலச்சிறந்த உரம் தருவது மண்புழு.
இனி இரசாயணங்கள் ஏறட்டும் கழு.
என் விவசாயியே, பொங்கி எழு;
இனி புதிதாய் உழு.

Saturday, December 2, 2006

ஒப்பற்ற ஒப்பனை-அதான் மேக்கப்புங்கோ

இன்றைய காலகட்டத்தில் makeup என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது... tweezingங்க்றாய்ங்க, facialங்க்றாய்ங்க, bleachingங்க்றாய்ங்க, ஒன்னும் புரியலடா சாமி...நம்ம நன்பர் ஒருத்தர்...சில பெண்களோட மே.மு-மே.பி படங்கள (அதாங்க மேக்கப்புக்கு முன் & மேக்கப்புக்கு பின்) மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்...சும்மா சொல்லக்கூடாது...மேக்கப்போட மகிமையே மகிமை..அவருக்கு பெண்களோட படங்கதான் கெடச்சிருக்கு...ஆணோட படத்துக்கு என்னோடத டெவலப் பண்ண குடுத்திருக்கேன்...அதுவரைக்கும் என்சாய் திஸ்...

நிறவெறித்தனம்- இன்னும் ஏன்? ஏன்? ஏன்?

காட்சி 1:

கடந்த ஞாயிறன்று இந்தியா-தென்னாப்ரிக்கா 3ஆவது ஒரு நாள் போட்டி. இந்தியா விளையாடிக் கொண்டிருந்த போது, தென்னாப்ரிக்க வீரர் Jacques Kallis வீசிய பந்தை இந்திய வீரர் M.S. Dhoni லகுவாக சிக்ஸர் அடித்துவிட, ஒரு அனிச்சை செயல் போல் Jacques Kallis Dhoniஐ நோக்கி உதிர்த்த வார்த்தைகள் என்னை உறையச் செய்தன...."You f...king Indian bastard." நிறவெறித்தனத்தின் கேவலமான வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று.

காட்சி 2:

இப்போது ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் Ashes தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Monty Panesar என்ற வீரரை நோக்கி, சில ஆஸ்திரேலிய கருங்காலிகள் "stupid Indian" என்று சொல்லியதைக்கூட ஒரு கணக்கில் சேர்க்கலாம். ஆனால் இதற்கு சப்பைக்கட்டும் விதமாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் Board தலைவர் James Sutherland சொன்ன வார்த்தைகளான "I don't think there's too much racist about that." நிறவெறி கருங்காலித்தனத்தின் உச்சகட்டம்.

இன்றைய காலகட்டத்தில், Competitive sportsல் வெறியோடு மோதிக் கொள்வது ஒரு சாதாரணமான காரியமாக போய்விட்ட போதும்கூட, இம்மாதிரியான நிகழ்வுகள் மனதில் விவரிக்க முடியாத வலியை ஏற்படுத்தி விடுகின்றன.

விளையாட்டு, இலக்கியம், இசை, கலை முதலியன ஜாதி, மதம், மொழி, நாடு, நிறம் என்ற எல்லைகளுக்கு அப்பாற்ப்பட்டவை என்பதே பொதுவான ஒரு பார்வையென்ற போதிலும், இன்று இம்மாதிரியான ஊடகங்களிலும், தேவையற்ற பல விஷ விதைகள் விதைக்கப்பட்டுவிட்டன என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை.

கிரிக்கெட்டில் slow over rate, excessive appealing, improper dress code போன்ற காரணங்களுக்காக வீரர்களின் match fee பறிக்கப்படுவதையும், பின்னர் வரும் சில ஆட்டங்களில் அவர்கள் விளையாட முடியாதபடி தடை செய்யப்படுவதையும் (suspension) பார்க்கும் போது, எனக்குள் எழும் சில கேள்விகள். இதே வகையான அல்லது இதை விட கடுமையான தண்டனைகள், தனிநபர் மற்றும் நிறவெறித்தாக்குதல் நடத்தும் வீரர்களுக்கு தரப்படுவதில்லை? இது இன்னும் apartheid இருக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது?

கேள்விகள்.....கேள்விகள்.....யாரிடம் உண்டு பதில்கள்?