Monday, November 27, 2006

கொள்ளுத் தாத்தா ரிஸ்க் எடுக்கமாட்டார்...

கீழே நீங்கள் காண்பது வ. வா. சங்கத்தின் தல கைப்புள்ள போட்ட பதிவில் இருக்கும் நகைச்சுவை கவிதையின் தமிழ் உருவாக்கம்....மொழியோடு களத்தையும், கவிதை (கதை) மாந்தரையும் சிறிது மாற்றியுள்ளேன். கைப்புள்ளயின் பதிவுக்கு இங்கே சுட்டுங்கள். http://vavaasangam.blogspot.com/2006/11/blog-post_20.html

இனி கவுஜக்குள்ள போவமா........?


குடிக்கும் போது நான் ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.

ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வரும் போது, மனைவி சமைத்துக் கொண்டிருக்கிறாள்.
சமையலறையில் பாத்திரங்களின் சத்தம்.
பூனை போல வீட்டுக்குள் நுழைகிறேன்.
என்னுடைய கருப்பு அலமாரியிலிருந்து போத்தலை எடுக்கிறேன்.
கொள்ளுத் தாத்தா போட்டோவிலிருந்து என்னைப் பார்க்கிறார்.

ஆனால் யாருக்கும் என் திருவிளையாடல் தெரியவில்லை.
ஏனெனில் குடிக்கும் போது நான் ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.

பழையதொரு சிங்க்கின் மேலே இருக்கும்
இன்னொரு அலமாரியிலிருந்து ஒரு தம்ப்ளரை எடுக்கிறேன்.
அவசரஅவசரமாக ஒரு பெக் போடுகிறேன்.
தம்ப்ளரை கழுவி மேலே வைக்கிறேன், மறக்காமல் போத்தலையும்.
கொள்ளுத் தாத்தா மெலிதாக சிரிக்கிறார்.
சமையலறைக்குள் மெதுவாக எட்டிப்பார்க்கிறேன்.
மனைவி உருளைக்கிழங்குகளை வெட்டிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் யாருக்கும் என் திருவிளையாடல் இன்னும் தெரியவில்லை.
ஏனெனில் குடிக்கும் போது நான் ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.

நான்: பக்கத்து வீட்டு ராமசாமி பொண்ணு கல்யாணம் பத்தி ஏதாச்சும் சேதி?
மனைவி: ஒன்னும் இல்லங்க. அவ ஒரு அதிர்ஷ்டக்கட்டை, பாவம் இன்னும் பாத்துகிட்டு இருக்காங்க.

நான் வெளியே வருகிறேன்; கருப்பு அலமாரி போடும் சின்ன சத்தம் கேட்கிறது; ஆனால் போத்தலை எடுக்கும் போது நான் சத்தம் போடவில்லை.
சிங்க்கின் மேலே இருக்கும் பழைய அலமாரியிலிருந்து
தம்ப்ளரை எடுக்கிறேன்; அவசரஅவசரமாக ஒரு பெக் போடுகிறேன்.
போத்தலை கழுவி சிங்க்கின் உள்ளே வைக்கிறேன்.
கருப்பு தம்ப்ளரையும் அலமாரிக்குள் வைக்கிறேன்.

ஆனால் யாருக்கும் என் திருவிளையாடல் இன்னும் தெரியவில்லை.
ஏனெனில் குடிக்கும் போது நான் ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.

நான்: ராமசாமி பொண்ணுக்கு அப்படி என்னடி வயசாயுருச்சி?
மனைவி: என்னங்க நீங்க? அதாச்சு அவளுக்கு ஏழு கழுதை வயசு. 29 ஆகப்போவுது.
நான்: ஓகோ.

நான் மீண்டும் வெளியே வருகிறேன்;
கருப்பு அலமாரிக்குள்ளிருந்து பழைய அலமாரியை எடுக்கிறேன்.
போத்தலை உருளைக்கிழங்குகளிலிருந்து எடுத்து
சிங்க்கிற்குள்ளேயே ஒரு பெக் போடுகிறேன்.
கொள்ளுத் தாத்தா சத்தம் போட்டு சிரிக்கிறார்
நான் அலமாரியை உருளைக்கிழங்குகளுக்குள் வைத்துவிட்டு.
கொள்ளுத் தாத்தா போட்டோவை கழுவி
கருப்பு அலமாரிக்குள் வைக்கிறேன்.
மனைவி சிங்க்கை அடுப்பின் மேல் ஏற்றிக் கொண்டிருக்கிறாள்.

ஆனால் யாருக்கும் என் திருவிளையாடல் இன்னும் தெரியவில்லை.
ஏனெனில் குடிக்கும் போது நான் ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.

நான்: (கோபத்துடன்) ராமசாமியவா கழுதைன்னு சொன்ன? இன்னொரு தடவ அப்படி பேசுனா நாக்க அறுத்துறுவேன்.
மனைவி: என்ன ஒளறறீங்க? வெளிய போய் சத்தம் போடாம ஒக்காரனும், தெரிஞ்சதா?

நான் மீண்டும் வெளியே வருகிறேன்;
கருப்பு போத்தலை உருளைக்கிழங்கிலிருந்து எடுத்து
அலமாரிக்குள்ளே போய் ஒரு பெக்கை போடுகிறேன்
சிங்க்கை கழுவி அலமாரிக்கு மேலே வைக்கிறேன்
மனைவி ஒரு சிரிப்பு சிரிக்கிறாள்.
கொள்ளுத் தாத்தா இன்னும் சமைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் யாருக்கும் என் திருவிளையாடல் இன்னும் தெரியவில்லை.
ஏனெனில் குடிக்கும் போது நான் ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.

நான்: (சிரித்துக் கொண்டே) போயும் போயி ராமசாமி ஒரு கழுதையவா கல்யாண்ம் செய்யப் போறான்?
மனைவி: என்ன முத்திப் போச்சா? போய் கொஞ்சம் மூஞ்சில தண்ணி அடிங்க.

நான் மீண்டும் சமையலறைக்கும் போய் அலமாரியின் மேல்
அமைதியாய் உட்காருகிறேன். அலமாரி அடுப்பின் மேல் இருக்கிறது.
வெளியே போத்தல்கள் போடும் சத்தம் கேட்கிறது.
எட்டிப் பார்த்தால் சிங்கிற்குள்ளே என் மனைவி
ஒரு பெக்கை போட்டுக் கொண்டிருக்கிறாள்.

ஒரு கழுதைக்கும் என் திருவிளையாடல் இன்னும் தெரியவில்லை.
ஏனெனில் குடிக்கும் போது கொள்ளுத் தாத்தா ரிஸ்க் எதுவும் எடுப்பதில்லை.

ராமசாமி இன்னும் சமைத்துக் கொண்டிருக்கிறான்.
நான் போட்டோவிலிருந்து என் மனைவியை
பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் யாருக்கும் என் திருவிளையாடல் இன்னும் தெரியவில்லை,
ஏனெனில் குடிக்கும் போது நான் என்ன எடுப்பதில்லை?

11 comments:

கைப்புள்ள said...

அகத்தீ! அருமையா எழுதிருக்கீங்க. மூலக் கவிதையின் சாரம் மாறாமலும் நம்ம ஊருக்கும் நம்ம ரசிகர்களுக்கும் ஏத்த மாதிரி நல்லா எழுதிருக்கீங்க.

உங்களோட இந்த கவிதையை சங்கம் பரிந்துரையில் சேர்க்கிறேன்.
http://vavaasangam.blogspot.com

அகத்தீ said...

கைப்புள்ள சார்,

சங்கம் பரிந்துரையில் சேர்த்து என்னை அங்கீகரித்தற்காக மிக்க நன்றி.

அகத்தீ said...

//அகத்தீ! அருமையா எழுதிருக்கீங்க.//

புரட்சித்தலைவர் இஷ்டைலுல "வெற்றி, வெற்றி."

சேதுக்கரசி said...

இதுக்காகத் தான் wait பண்ணிட்டிருந்தேன்.. சூப்பர் அகத்தீ :-)

//மூலக் கவிதையின் சாரம் மாறாமலும் நம்ம ஊருக்கும் நம்ம ரசிகர்களுக்கும் ஏத்த மாதிரி நல்லா எழுதிருக்கீங்க.//

கைப்ஸ் சொன்னதை வழிமொழியிறேன். கருத்தை உள்வாங்கிட்டு நம்ம நாட்டு நெலவரத்துக்கு ஏத்த மாதிரி மாத்தி எழுதறது தான் நல்ல மொழிபெயர்ப்புங்கிறது என் "கருத்து". அந்த வகைல இது சூப்பர் :-)

Syam said...

நம்ம தலயே சொல்லிட்டாரு அப்புறம் வேற என்ன இருக்கு...சூப்பரா தமிழ்படுத்தி இருக்கீங்க... :-)

நாமக்கல் சிபி said...

அருமை! அருமை!!!

நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி எழுதி படம் கெளப்பிட்டீங்க :-)

அகத்தீ said...

நன்றி சேதுக்கரசி, ஷ்யாம், மற்றும் வெட்டிப்பயல்....உங்கள் பாராட்டுக்கள் எனக்கு கிடைத்த பெரிய honor...Thanks Guys

துளசி கோபால் said...

வீக் எண்ட் வந்துருச்சே, அலமாரியிலே இருந்து பாட்டிலை எடுக்கலாமுன்னா,
அகத்தீ இப்படி வந்து டம்ப்ளரையும் சேர்த்து எடுத்துட்டுப்போயிட்டீரேப்பா!

சூப்பரா வந்துருக்கு.

சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் ஆகப் பரிந்துரை செய்கின்றேன்:-))))

சேதுக்கரசி said...

உங்க பதிவிலிருந்து மறுமொழிகள் தமிழ்மணத்தில் திரட்டப்படற மாதிரி தெரியலியே...

அகத்தீ said...

//வீக் எண்ட் வந்துருச்சே, அலமாரியிலே இருந்து பாட்டிலை எடுக்கலாமுன்னா,
அகத்தீ இப்படி வந்து டம்ப்ளரையும் சேர்த்து எடுத்துட்டுப்போயிட்டீரேப்பா!//

அக்கா...இது வேறயா? எப்ப இருந்து இது?

//சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் ஆகப் பரிந்துரை செய்கின்றேன்//

ஆத்தா நான் பாஸாயிட்டேன்.

அகத்தீ said...

சேதுக்கரசி..

என்ன problemனு தெரியலை.