அன்புள்ள அம்மா.
உன்னிடம் கேட்பதற்கு
நிறைய கேள்விகள் உண்டு.
ஆனால் முகமுகமாய்
பேசமுடியாமல்
பாழாய்ப்போன
நாகரீக வெட்கம் தடுக்கிறது.
எனவே கவிதைதான்
என் கைக்கருவி.
அம்மா!
* நீ என்னை வைத்திருந்த
கருவறையின் கதகதப்புக்கு
என்ன கைம்மாறு செய்வேன்?!
* கருவில் உன்னை
நிரம்ப உதைத்தேனா?
* என்னைப் பெற்றெடுக்கையில்
அதிகமாய் வலித்ததா?
* பசிக்காய் அழுதழுது
உன் தூக்கம் கெடுத்தேனா?
* பாலூட்டும்போது உன்னை
காயப்படுத்தினேனா?
எல்லாவற்றுக்கும் ஏதோ
என்னால் முடிந்ததாய்
கவிதை கருப்பையில்
உனை சுமந்து பெறுகிறேன்.
2 comments:
நல்ல கவிதை.
வ.வா.சங்கத்தில் பின்னூட்டம் கண்டு உங்கள் வலைப்பூவுக்கு வந்தேன். அந்தக் கவிதையை மொழிபெயர்ப்பைத் தேடி :-)
(1) மறுமொழி மட்டுறுத்தல் செய்யுங்கள்
(2) தமிழ்மணத்தில் "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் உங்கள் பதிவு வர உடன் ஏற்பாடு செய்யுங்கள். விவரங்கள் தமிழ்மணம் பயனர் கையேட்டில் இருக்குமென்று நினைக்கிறேன்.
Post a Comment