Friday, November 17, 2006

காமாலைப் பார்வைகள்

காலையில் வங்கி செல்லும் அவசரத்திலும் அந்த காட்சி கண்ணில் பட்டது. அந்த கிழவன் பக்கத்தில் பிச்சை எடுத்து கொண்டிருக்கும் சிறுவனை விரட்டிக்கொண்டிருந்தான். "டேய்! ஏண்டா நா இருக்க எடந்தான் ஒனக்கு கெடச்சுதா? வந்துட்டான் பொலப்புல மண்ண போட, வேற எங்கயும் போய்த் தொலயாம?!" அவனுடைய சுயநலத்தை பார்த்து எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. "என்ன மனுஷன் இவன்?' நிணைத்துக்கொண்டே சென்று விட்டேன்.மாலையில் வீடு திரும்பும் பொழுது அந்த இடத்தில் ஒரே கூட்டம். எட்டிப் பார்த்தேன். அதே சிறுவன், அதே கிழவன். இப்போது சிறுவன் உயிரற்ற சடலமாக; பக்கத்தில் அதே கிழவன் பெருங்குரலில் அழுது கொண்டிருந்தான். "ஆரு பெத்த புள்ளயோ? இப்படி கெடக்குதே? அய்யா, சாமீ, தர்மம் பண்ணுங்கய்யா?." சிறுவனை அடக்கம் செய்ய அவன் கையேந்திக்கொண்டிருப்பது புரிந்தது. அவனுடைய அழுகுரலில் உள்ள உண்மை என் உள்ளத்தை சுட்டது. காலையில் ஒரு கணம் அவனைக் குறித்த ஒரு மேலோட்டமான பார்வையில் அவனை ஒரு தவறான மதிப்பீடு செய்தது நிணைவுக்கு வந்தது. ஒரு விவரிக்க முடியாத உணர்வு என்னை கவ்வ, கணத்த இதயத்தோடு அந்த இடத்தை விட்டு அகண்றேன்.

1 comment:

✪சிந்தாநதி said...

பின்னூட்டம் இங்கே

"Bhartha Naadu Pazham (read fruit) Perum Naadu"

காமாலைப் பார்வைகள் ஏன் இருமுறை?

--------------
http://valai.blogspirit.com/